மாணவர்கள் லட்சியத்தோடு படிக்க வேண்டும்

ஊட்டி, மே 18: ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவு வாயில் திறப்பு விழா நடந்தது. விழாவில், கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். ஊட்டி நகராட்சி தலைவர் வாணிஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார் மற்றும் ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீலகிரி எம்பி ஆ.ராசா தலைமை வகித்து பேசுகையில்,``மாணவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறார். அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயில செல்லும் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் கற்றல் குறைபாடுகளை களைய தன்னார்வலர்கள் மூலம் குடியிருக்கும் பகுதிகளிலேயே மாணவர்களுக்கு கற்பிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் தாங்கள் நினைக்கும் இடத்தை அடையே லட்சியத்துடன் படிக்க வேண்டும்’’ என்றார். இவ்விழாவில் கல்லூரி விலயங்கியல் துறை தலைவர் எபினேசர், உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: