ராயபுரம் பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், பகுதி-5க்கு உட்பட்ட, வள்ளியம்மாள் சாலை மற்றும் சர்.ராமசாமி சாலையிலுள்ள 1050 மி.மீ விட்டம் கொண்ட ஜிவி4 பிரதான குடிநீர் குழாயில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகள் இன்று காலை காலை 10.30 மணி முதல் நாளை காலை 10.30 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால், வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கொண்டித்தோப்பு, சவுகார்பேட்டை, ஏழுகிணறு, ஜார்ஜ் டவுன், பிராட்வே, புதுப்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இப்பணிகள் முடிக்கப்பட்டு, 20ம்தேதி முதல் காலை முதல் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

மேலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.  அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள பகுதிப் பொறியாளர்-5 (ராயபுரம்) 8144930905 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: