நன்னடத்தை பிணையை மீறிய 3 பேருக்கு சிறை தண்டனை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட காஞ்சிபுரம் பல்லவர் மேடு கோபி (எ) கோழி கோபி (33), தாயார் குளம் ஹரிபாபு (24) ஆகியோரை சிவகாஞ்சி போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களது கோரிக்கையை ஏற்று, 2 பேரும் ஓராண்டு நன்னடத்தை பிணையில் இருக்கும்படி காஞ்சிபுரம் ஆர்டிஓ ஆணை பிறப்பித்தார்.

இந்தவேளையில், கோபி, ஹரிபாபு ஆகியோர் நன்னடத்தை பிணையை மீறி ஜவஹர்லால் நேரு மார்க்கெட் அருகே டாஸ்மார்க் கடை ஊழியர் ராயக்கோட்டையை சேர்ந்த ராஜன் (36) என்பவரை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை மீண்டும் கைது செய்தனர். இந்நிலையில், நன்னடத்தை பிணையை மீறியதற்காக கோபியை 69 நாட்களும், ஹரிபாபுவை 220 நாட்களும் சிறையில் அடைக்க ஆர்டிஓ உத்தரவிட்டார்.

இதேபோல் காஞ்சிபுரம் காமராஜர்  நகரை சேர்ந்தவர் பரத் (27). பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பொது இடத்தில் கூட்டுக் கொள்ளை அடிக்க முயன்றதாக அவரை, போலீசார் கைது செய்தனர். அவரையும் நன்னடத்தை மீறியதற்காக 72 நாட்கள் சிறையில் அடைக்க வருவாய் கோட்டாட்சியரால் உத்தரவிடப்பட்டது.

Related Stories: