மர்ம நபர்கள் ஊடுருவலை தடுக்க கடலோர பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு

கடலூர், மே 14: இலங்கையிலிருந்து மர்ம நபர்கள் ஊடுருவலை தடுக்க கடலூர் மாவட்ட கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இலங்கையில் நிகழும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உளவுத்துறை எச்சரிக்கை செய்தது. இதையடுத்து கடலோர காவல்படையினர் தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளிலும் கடலோர காவல்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் ரமேஷ், காவலர் புஷ்பநாதன் உள்ளிட்ட போலீசார் 49 மீனவ கிராமங்களில் உள்ள கடலோர பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, புதிய படகுகள் மற்றும் புதிய நபர்கள் யாரும் கடல் வழியாக ஊடுருவி வருகிறார்களா என்று கண்காணித்து வருகின்றனர். இலங்கையில் இருந்து கடல் வழியாக மர்ம நபர்கள் ஊடுருவலை தடுக்கவும், ரோந்து பணியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: