கடலூர் கிழக்கு மாவட்டத்தில் திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள்

கடலூர், மே 14: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் கடலூர் கிழக்கு மாவட்டத்தில் நடைபெற உள்ளது. வரும் 16ம் தேதி சிதம்பரம் மற்றும் 17ம் தேதி கடலூரில் நடைபெறும் கூட்டத்தில், செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை கழக பேச்சாளர் வேங்கை சந்திரசேகர் பேசுகின்றனர். 17ம் தேதி புவனகிரியில்,மகளிரணி பிரசார குழு செயலாளர் சேலம் சுஜாதா, தலைமை கழக பேச்சாளர் கவிஞர் ஆதித்யன் பேசுகின்றனர். 21ம் தேதி குறிஞ்சிப்பாடியில், இலக்கிய அணி இணைச் செயலாளர் வி.பி.கலைராஜன், தலைமை கழக பேச்சாளர் மார்ஷல் முருகன் பேசுகின்றனர். 22ம் தேதி காட்டுமன்னார்கோவிலில்  செய்தி தொடர்பு இணைச் செயலாளர், சிவஜெயராஜ் தலைமை கழக பேச்சாளர் ஆரூர் மணிவண்ணன் பேசுகின்றனர், என தெரிவித்துள்ளார்.

Related Stories: