மாவட்டத்தில் பரவலாக மழை

நாமக்கல், மே 14: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குளிர்ந்த காற்றுடன் கூடிய சீதோஷ்ண நிலை நிலவியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில், நேற்று காலை 6 மணிவரை பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்) வருமாறு: எருமப்பட்டி-5, குமாரபாளையம்-18.40, மங்களபுரம்-5.60, நாமக்கல்-5, பரமத்திவேலுார்-4, புதுச்சத்திரம்-21, ராசிபுரம்-19.80, சேந்தமங்கலம்-6, திருச்செங்கோடு-12, கலெக்டர் அலுவலகம்-14, கொல்லிமலை-23.

Related Stories: