விவேகானந்தா மகளிர் கல்லூரிகளில் ஆண்டுவிழா

திருச்செங்கோடு, மே 14: திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி, மகளிர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் விவேகானந்தா மேலாண்மை கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலாளர் கருணாநிதி தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணை செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், துணைத்தலைவர் டாக்டர் கிருபாநிதி, இயக்குனர் நிவேதனா கிருபாநிதி, முதன்மை நிர்வாகி சொக்கலிங்கம், நிர்வாக இயக்குநர் குப்புசாமி முன்னிலை வகித்தனர். கல்லூரி ஆண்டறிக்கையை முதல்வர்கள் விஜயகுமார், தேவி, மோகனசுந்தரம் வாசித்தனர். கோவை ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிர்வாகி கவிதாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

விழாவில் சிறந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி, மகளிர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் விவேகானந்தா மேலாண்மை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அனைத்து கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவி ஸ்நேகா நன்றி கூறினார்.    

Related Stories: