1,107 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

சேந்தமங்கலம், மே 14: கொல்லிமலை ஒன்றியம் தின்னனூர்நாடு ஊராட்சியில் நாமக்கல் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் விவசாய தொழில்நுட்ப கருத்தரங்கம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் தலைமை வகிதார். இதில் அறிவியல் நிலைய பேராசிரியர்கள், வல்லுனர்கள், குழுத் தலைவர் அழகுதுரை ஆகியோர் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் பேசுகையில், நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் மீன் வளர்ப்பு, நெல், மிளகு, காபி மற்றும் தோட்டப் பயிர்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பயிர்களில் ஏற்படும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதற்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள் இயற்கை தானியங்களான சாமை, திணை, கேழ்வரகு போன்றவற்றின் அவசியத்தை உணர்ந்து அதனை கொல்லிமலையில் அதிக அளவில் சாகுபடி செய்ய வேண்டும், என்றனர். கூட்டத்தில் நிலைய விஞ்ஞானிகள் முருகன், சத்தியா, பால்பாண்டி, கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், காபி வாரிய அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட முன்னோடி விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: