கிருஷ்ணகிரியில் 47.4 மி.மீ மழை

கிருஷ்ணகிரி, மே 14: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலையும், மாவட்டத்தில் பல பகுதியில் சாரல் மழை பெய்தது. நேற்று காலை வரை பெய்த மழை அளவு(மில்லி மீட்டரில்): தளி -10, பெணுகொண்டாபுரம் -8.2, கிருஷ்ணகிரி -5.8, நெடுங்கல் -5.2, சூளகிரி -4, பாரூர் -3.6, போச்சம்பள்ளி -3.6, ஊத்தங்கரை -2.6, தேன்கனிக்கோட்டை -2.2, அஞ்செட்டி -2.2 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 47.4மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Related Stories: