பட்டதாரி, டிரைவர் உள்பட 3பேர் மாயம்

போச்சம்பள்ளி, மே 14: போச்சம்பள்ளி அடுத்த மேட்டூப்பூலியூரைச் சேர்ந்தவர் இளம்பரிதி(32). எம்எஸ்சி, பிஎட் பட்டதாரியான இவர் வேலை ேதடி வருகிறார். இன்னும் திருமணமாகவில்லை. நேற்று முன்தினம், வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரின் தந்தை மூர்த்தி அளித்த புகாரின்பேரில், பாரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மத்தூர் அடுத்த அண்ணாநகரைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் அண்ணவேல். கடந்த 10ம் தேதி வெளியே சென்ற அவர், மீண்டும் வீடுதிரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா அளித்த புகாரின் பேரில், மத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர். அதே போல், போச்சம்பள்ளி அடுத்த ஈச்சங்காடு பகுதியை சேர்ந்த மாது மகள் அகல்யா(17). 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அகல்யா திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், மத்தூர் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Related Stories: