சூறைக்காற்றுக்கு மின்கம்பங்கள் சேதம்

ஊத்தங்கரை, மே 14:  ஊத்தங்கரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தபோது, ஆங்காங்கே வாழை மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்து சேதம் ஏற்பட்டது. ஊத்தங்கரை அடுத்த வண்டிக்காரன் கொட்டாய் பகுதியில் இரண்டு மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால், அப்பகுதியில் உள்ள 10 வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கடந்த 5 நாட்களாக விழுந்த மின்கம்பங்களை சரி செய்யவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். மின் கம்பங்களை சரிசெய்து, உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: