செல்போன் வாங்கி தராததால் பள்ளி மாணவன் தற்கொலை

கிருஷ்ணகிரி, மே 14: ராயக்கோட்டை அடுத்த லிங்கனம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜன் மகன் ஹரீஷ்(17). அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தந்தையிடம், புதிய செல்போன் வாங்கி தரும்படி கேட்டுள்ளான். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த ஹரீஷ், நேற்று முன்தினம் வீட்டின் அருகேயுள்ள மாட்டுக்கொட்டகையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தான். பெற்றோர் அவனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஹரீஷ், நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தான். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: