தலசீமியா நோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

தர்மபுரி, மே 14: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தலசீமியா நோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி தலைமை வகித்து பேசியதாவது:தர்மபுரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் சித்தேரி, சிட்லிங் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களில், மரபணு நோயான தலசீமியா தாக்கம் உள்ளது. இந்தநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு வயிறு வீக்கம், ரத்தசோகை ஆகிய ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளுக்கு, 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை என வாழ்நாள் முழுவதும் ரத்தம் அளிக்க வேண்டும். சென்னையில் மட்டும் அளிக்கப்பட்டு வந்த இந்த சிகிச்சை, தற்போது தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தலசீமியா நோய் சிகிச்சை மையத்தில் அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையை நோய் பாதிப்பு உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். இதில் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: