கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம்

தர்மபுரி, மே 14:  தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க நிர்வாகிகள், சுப்பிரமணியசிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் ரகமத்துல்லாகானிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பணியின் போது உயிரிழந்தால், அவர்களின் குடும்பங்களுக்கு ₹5 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும். விபத்து காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: