6 காவல் நிலையங்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள்

கரூர், மே 14: கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் அருகே காவல் நிலையங்களுக்கு நான்கு சக்கர ரோந்து வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.கரூர், தாந்தோணிமலை, வாங்கல், வெங்கமேடு, பசுபதிபாளையம், வெள்ளியணை ஆகிய காவல் நிலைய பகுதிகளில் 24மணி நேரமும் கண்காணிக்கும் வகையிலும், குற்றச்சம்பவங்களின் போது உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்லும் வகையிலும் நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் பெறப்பட்டு அதனை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் கலந்து கொண்டு வாகனங்களை ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் உட்பட அனைத்து போலீசார்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: