ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு அன்னதானம்

ஓமலூர், மே 13: முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ஓமலூரில் உள்ள இதயாலயா ஆதரவற்றோர்  இல்ல குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், சவுந்திரராஜன், முன்னாள் வட்டார தலைவர் வெங்கடேஷ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ராஜீவ்காந்தி, மத்திய மாவட்ட இளைஞரணி துணை தலைவர் கவுதம், சதீஷ், வேலு, சுகுமார், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: