தம்மம்பட்டி பஸ் நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு

தம்மம்பட்டி, மே 13: தம்மம்பட்டிக்கு பர்மிட் இருந்தும் சில தனியார் பஸ்கள் வருவதில்லை. மேலும் சில தனியார் பேருந்துகள் டிரிப்புகளை இயக்குவதில்லை. இதுகுறித்து, போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி உத்தரவின்பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் தம்மம்பட்டி பஸ் நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், தனியார் பேருந்து ஒன்றுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. பர்மிட் இருந்தும் இயக்கப்படாத தனியார் பஸ்களுக்கு எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

Related Stories: