நமக்கு நாமே திட்டத்தில் சுகாதார வளாகம்

திருச்செங்கோடு, மே 13: திருச்செங்கோடு நகராட்சி சூரியம்பாளையம் பகுதியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ₹21 லட்சம் மதிப்பிலான நவீன ஆண்கள் சுகாதார வளாகம் கட்டுமான பணிக்கு பொதுமக்கள் பங்களிப்பாக சூரியம்பாளையம் பாவடி பஞ்சாயத்து, செங்குந்தர் சமூகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் ₹7 லட்சம் வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, துணைத்தலைவர் கார்த்திகேயன், ஆணையாளர் கணேசன், பொறியாளர் சண்முகம் ஆகியோரிடம் பாவடி பஞ்சாயத்து நாட்டாண்மைக்காரர், காரியக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் ரவிக்குமார், ரமேஷ், புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: