அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

கிருஷ்ணகிரி, மே 13: பர்கூர் ஒன்றியம் பிஆர்ஜி.மாதேப்பள்ளி கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் நவீன எல்இடி வாகனம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த, பல்வேறு துறை சார்ந்த திட்டப்பணிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகள் குறித்து வீடியோ படக்காட்சி திரையிடப்பட்டது. இதில், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம்தேடிக் கல்வி, மக்களைதேடி மருத்துவம், மலை கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை, கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன்மேம்பாட்டு திட்டம், தோட்டக்கலை துறை சார்பில் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் அமைக்க காய்கறி விதைகள் வழங்குதல், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்குதல், மகளிர் சுயஉதவி குழுவினருக்கு தொழில்சார் கடனுதவி, மீண்டும் மஞ்சப்பை, மருத்துவ கல்லூரி திறப்பு விழா, கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக தாது உப்பு தயாரிக்கும் தொழிற்சாலை திறந்து வைத்தல் உள்ளிட்ட ஏராளமான புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த புகைப்பட கண்காட்சியினை 500க்கும் அதிகமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Related Stories: