6 கிலோ கஞ்சா பறிமுதல்

கடத்திய வாலிபர் கைதுகிருஷ்ணகிரி, மே 13:  கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் போலீசார் பசவன்னா கோயிலில் இருந்து வரட்டனப்பள்ளி செல்லும் சாலை சின்னமட்டாரப்பள்ளி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த நபரை நிறுத்தி விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக பதில்அளித்ததால் கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். அதில், அவர், குருவிநாயனப்பள்ளி நல்லமான்சந்தையை சேர்ந்த சுரேஷ்(22) என்பதும், டூவீலரில் இருந்த 3 பைகளில் ₹60 ஆயிரம் மதிப்பிலான 6 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா, டூவீலரை பறிமுதல் செய்த போலீசார் சுரேசை கைது செய்தனர்.

Related Stories: