கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி, மே 13: கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம், வருகிற 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை கிருஷ்ணகிரி டிரினிடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் 10 முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் கலந்துகொள்ளலாம். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கோச்சிங்கில் லெவல் -1 தகுதி பெற்ற பயிற்சியாளர்கள், இந்த முகாமை நடத்துகிறார்கள்.

எனவே, கிருஷ்ணகிரி மண்டலத்தில் விருப்பமுள்ளவர்கள், தங்கள் பெயர்களை, மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். தவிர சங்கத்தின் இணை செயலாளர் சிவசங்கரை 9677000063 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து, பயிற்சிக்கான விண்ணப்பங்களை பெற்று, பதிவு செய்துக்கொள்ளவும்.

ஓசூரில் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் குறித்து உப தலைவர் சுனில் 9842740963 மற்றும் இணை செயலாளர் ராஜப்பா 9964869001 ஆகியோரை தொடர்பு கொண்டு, விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: