கொங்கு பொறியியல் கல்லூரி சார்பில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ.46.75 லட்சம் நிதிஉதவி

ஈரோடு,மே13:  பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி டி.பி.ஐ.ன் சார்பில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்வி அறக்கட்டளை தலைவர் வி.கே.முத்துசாமி, டி.பி.ஐ.ன் தலைவர் பி.சி.பழனிசாமி, கல்லூரி தாளாளர் பி.சச்சிதானந்தம், முதல்வர் வி.பாலுசாமி ஆகியோர் கலந்து கொண்டு, இளம் கண்டுபிடிப்பாளர்களான ஆர்.ஹரிணி, வர்ஷன்மோகன்,ஜேக்கப் தெக்கேரே,சதீஷ், சீனிவாசன் ஆகியோருக்கு ரூ.46.75 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினர்.இந்த நிதி உதவியின் மூலம் டி.பி.ஐ.-ன் கட்டமைப்பு,ஆலோசனை வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்பு சாதனங்களை தயாரிக்க இவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 39 இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ.3.28 கோடிக்கு மேல் நிதி உதவி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக பெறலாம்.

இதுவரை 76 இளம் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு பல்வேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ. 8.18 கோடி வரை குறைந்த வட்டியுடன் கூடிய கடனாகவும், மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க கொங்கு டி.பி.ஐ.-ன் பல்வேறு திட்டங்கள் வாய்ப்பளிக்கின்றன. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு www.tbi-kec.org என்ற வலைதளத்தில் தகவல்களை பெறலாம்.

Related Stories: