வீடு கட்டி தருவதாக ரூ.68 லட்சம் மோசடி: கட்டுமான நிறுவன உரிமையாளர் கைது

சென்னை: வீடு கட்டி தருவதாக பெண்ணிடம் ரூ.68 லட்சம் மோசடி செய்த கட்டுமான நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணி சி.என்.கே. சாலையை சேர்ந்தவர் ஷகிலா பானு (45). இவர் அதே பகுதியில் வீடு கட்ட முடிவு செய்தார். அதற்காக தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் முகமது சாகில் (43) என்பவரை அணுகினார். வீடு கட்டி அனைத்து பணிகளும் முடிந்து வீட்டின் சாவி கொடுப்பதாகவும், அதற்காக ரூ.68 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதன்படி ஷகிலா பானு, ரூ.68 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் சொன்னபடி முகமது சாகில் வீடு கட்டாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுகுறித்து கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ஷகிலா பானு கேட்டபோது, முறையாக பதில் அளிக்காமல் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஷகிலா பானு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து முகமது சாகிலை ேநற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

Related Stories: