கட்டிட உரிமையாளர் உள்பட மூவர் மீது வழக்கு

முசிறி, மே12: திருச்சி அடுத்த சமயபுரம் அருகே நெ. 1 டோல்கேட் மேனகா நகரில் அப்பார்ட்மென்ட் அருகே கீழே காற்றில் சாய்ந்து விளம்பர போர்டை தூக்கியபோது மின்சாரம் பாய்ந்து சேட்டு, செல்லதுரை என்ற 2 தொழிலாளிகள் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கட்டிட உரிமையாளர்கள் லால்குடி அப்துல்ரகுமான், டோல்கேட் கமருதீன், உறையூர் முகமதுரபீக் ஆகியோர் மீது கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Related Stories: