மதுகுடித்ததை கண்டித்ததால் லோடுமேன் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, மே 12: திருச்சி ஏர்போர்ட் அபார்ட்மெண்ட் பகுதியில் குடியிருந்து வந்தவர் சுரேஷ்குமார் (35). கே.கே.நகர் பகுதியில் உள்ள மாநில அரசு அரிசி குடோன் லோடுமேன். இவரது மாரீஸ்வரி. திருமணமாகி 8 மாதம் ஆகிறது. தினமும் மதுகுடித்து வந்த சுரேஷ்குமார் கடந்த ஓராண்டாக குடியை நிறுத்தி இருந்தார். இதற்கிடையில் திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த 1 வாரமாக சுரேஷ்குமார் குடிக்க துவங்கியதால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வேதனையடைந்த சுரேஷ்குமார் நேற்று ஏர்போர்ட் காந்திநகர் அருகே உள்ள மைதானத்தில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: