மர்ம நபருக்கு வலை நூல் விலை உயர்வு கண்டித்து கரூரில் நெசவு, பனியன் தொழிற்சாலைகள் 2 நாள் மூடல்

கரூர், மே 12: கரூர் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வரலாறு காணாத நூல் விலை உயர்வு குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து பிரதான ஜவுளி சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன்படி, முதற்கட்டமாக, மே 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் தழுவிய கடையடைப்பு செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. சங்க உறுப்பினர்கள் அனைவரும் 16 மற்றும் 17 இரண்டு நாட்கள் தங்களின் நிறுவனங்களை அடைத்து, உற்பத்தி நிறுத்தம் செய்து, கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: