சிதம்பரம் அஞ்சல் அலுவலகத்தில் பொருட்கள் துணிகர திருட்டு

சிதம்பரம், மே 12:  சிதம்பரம் கச்சேரி தெருவில் அஞ்சல் அலுவலகம் இயங்கி வருகிறது. கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி இந்த அஞ்சல் அலுவலகத்தில் கதவை உடைத்து உள்ளே இருந்த கம்ப்யூட்டர், சிபியு, ஸ்கேனர், கீ.போர்டு, மவுஸ், ஸ்விட்ச் பாக்ஸ் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டிருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ 40 ஆயிரம் ஆகும். இச்சம்பவம் குறித்து சிதம்பரம் கிழக்கு உட்கோட்ட துணை அஞ்சல் கண்காணிப்பாளர் மணிவேல் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: