வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு

ஊத்தங்கரை, மே 12:  ஊத்தங்கரை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெகடர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  ஊத்தங்கரை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் திருவணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ₹19 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் சுற்றுச்சுவர் கட்டும் பணி, கொண்டம்பட்டியில் ₹23.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் ஊராட்சி அலுவலக கட்டிடம், மிட்டப்பள்ளி ஊராட்சியில் ₹70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் சமுதாயக்கூடம், ஜே.ஜே. நகரில் ₹2.76 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் மூன்று தொகுப்பு வீடுகள். ₹8.70 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுகாதார வளாகம் உள்ளிட்ட திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொதுமக்களிடம் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி உள்ளிட்ட குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்குமரன், சிவபிரகாசம், பொறியாளர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் திருவணப்பட்டி ரஜினிசெல்வம், மிட்டப்பள்ளி சின்னத்தாய், கொண்டம்பட்டி சத்தியவானி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: