மின்வாரிய குறைதீர் கூட்டம்

சென்னை: தி.நகர், பொன்னேரி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தி.நகர் மற்றும் பொன்னேரி கோட்டங்களில்  மே 13ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் அலுவலகம், வள்ளுவர் கோட்டம், எஸ்.எஸ் வளாகம், 97, எம்.ஜி.ஆர் நகர் (கோடம்பாக்கம் நெடுஞ்சாலை) என்ற முகவரியில் நடக்கிறது. மேலும் இதே தேதியில் பொன்னேரி கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்   காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் அலுவலகம், டி.எச் ரோடு, வேண்பாக்கம், பொன்னேரி என்ற முகவரியில் நடக்கிறது. பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: