பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ஆய்வு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு சென்னை மாநகராட்சிக்கு பாராட்டு

சென்னை: சென்னை மாநகராட்சி தணிக்கை அறிக்கை தொடர்பான தமிழ்நாடு சட்டமன்றபேரவை பொதுக்கணக்கு குழுவின் ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ தலைமையில் நேற்று நடந்தது.பின்னர் அவர் தலைமையிலான குழுவினர் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தினை பார்வையிட்டு, உயிரி அகழ்ந்தெடுத்த முறையில் குப்பை அகழ்ந்தெடுக்கும் பணியை ஆய்வு செய்து மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்ந்து, பெருங்குடி நகர்ப்புற சமுதாய நல மையத்தை ஆய்வு செய்தனர். மேலும்,  சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை திட்டத்தின் கீழ் சேத்துப்பட்டு கூவம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும் ஆய்வு செய்தனர். இதில், குழு உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் பூண்டி கே.கலைவாணன், ஜவாஹிருல்லா, வேல்முருகன், எஸ்.சுதர்சனம், எஸ்.காந்திராஜன், சிந்தனை செல்வன், ஒய்.பிரகாஷ், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலாளர் சீனிவாசன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் விஜயராஜ் குமார், சிறப்பு பணி அதிகாரி ராஜா, துணை ஆணையர்கள் பிரசாந்த், எஸ்.மனிஷ், விஷூ மஹாஜன், சினேகா, சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், சிவகுரு பிரபாகரன், எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குனர் ஆகாஷ் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: