ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: எட்டுமனூர் - கோட்டயம் - சிங்கவனம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி நடைபெற நடைபெறுவதால் அவ்வழியாகச் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் (12623, 12624) அதிவிரைவு ரயிலானது வரும் 20, 21 மற்றும் 22ம் தேதிகளில் திருப்பணித்துரா, கோட்டயம், சங்கனேசரி, திருவல்லா, செங்கன்னூர் மற்றும் மாவேலிக்கரா ஆகிய நிலையங்களில் ரயில் நிற்காமல் ஆழப்புழா வழியாக செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: