ரயில்வே லெவல் கிராசிங்கில் சுரங்கப்பாதை அமைக்க ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம் தரணிவராகபுரம் லெவல் கிராசிங் எண் 42 மற்றும் முருகம்பட்டு லெவல் கிராசிங் எண் 43 ஆகிய ரயில்வே கேட் வழியாக பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் ரயில்கள் செல்லும் போது அடிக்கடி கேட்கள் அடைக்கப்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் தெற்கு ரயில்வே இதை மாற்றியமைத்து சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, இது தொடர்பாக ஆட்சேபனை ஏதும் இருந்தால் திருவள்ளுர் மாவட்ட கலெக்டருக்கு அறிவிப்பு வெளியான 15 நாள்களுக்குள் எழுத்து மூலமாக பொதுமக்கள் தெரிவிக்கலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: