சிறை வாச ரவுடி குண்டாசில் கைது

திருச்சி, மே 11: திருச்சி ரங்கம் வீரேஸ்வரம் அருகே கடந்த மாதம் 3ம் தேதி, பைக்கில் சென்ற மின்பொறியாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம் பறித்து சென்ற ரவுடி மகாமுனி (36) என்பவரை ரங்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகாமுனி மீது திருச்சி புறநகரில் உள்ள காவல் நிலையங்களில் கஞ்சா வழக்கு உள்பட 19 வழக்குகளும், மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்பட 6 வழக்குகளும் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர் என்பதால் சிறையில் உள்ள மகாமுனியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடக்கோரி ரங்கம் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் கமிஷனருக்கு பரிந்துரைத்தார். இதனை ஏற்ற திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன், மகாமுனியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் உள்ள மகாமுனியிடம், அதற்கான நகலை போலீசார் ஒப்படைத்தனர்.

Related Stories: