மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தில் ஆட்சீஸ்வரர் கோயில் தேரோட்டம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா நடந்தது. இதையொட்டி, தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தில் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த 3ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினமும் விக்னேஸ்வர உற்சவம், சூரிய பிரபை, சந்திரப் பிரபை, அதிகார நந்தி சேவை, பூதம், நாகம், அன்னம், யானை, சிம்மம் உள்பட பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்நிலையில், திருத்தேர் உற்சவம் நேற்று காலை 8 மணிளவில் நடந்தது. அச்சிறுப்பாக்கம் 4 மாட வீதிகளில் தேர் வீதி உலா வந்து, மீண்டும் கோயில் நிலையை அடைந்தது. இதில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ரா.வெங்கடேசன், தக்கார் அ.சிவலிங்கம், ஆய்வாளர் ரா.சிவகாமி, ஆலய அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் ஆகியோர் செய்தனர்.

Related Stories: