ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் சிக்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ஆர்.கே.பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆந்திரா மாநில பதிவு எண் கொண்ட ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் 1 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம் கொத்தபள்ளி மிட்டா பகுதியைச் சேர்ந்த யுவராஜ்(32) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 டன் ரேஷன் அரிசி மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து திருவள்ளூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

Related Stories: