வயலில் மேய்ந்துகொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அறுவடை செய்த நெல் வயலில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்ததில் 4 மாடுகள் பலியானது. திருவள்ளூர் அடுத்த கல்யாணகுப்பம் ஊராட்சி வேட்டைக்காரன்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நெல் அறுவடை வயலில் மேய்ச்சலுக்கு நேற்று ஓட்டிச்சென்றனர். அப்போது, வயலில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் திடீரென துள்ளி, துள்ளி கீழே விழுந்தன. இதை பார்த்து உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது, அவர்கள் சென்று பார்த்தபோது, தாழ்வாக சென்ற மின்வயர் அறுந்து விழுந்து கிடந்ததை மிதித்ததால் 4 மாடுகள் பலியானது தெரியவந்தது. தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், ஊராட்சி தலைவர் சுமித்ரா சுந்தர், ஊராட்சி செயலாளர் சுந்தர், கால்நடை மருத்துவர் நதியா, கால்நடைத்துறை ஆய்வாளர் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

புள்ளிமான் மீட்பு: கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஈகுவார்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காரம்பேடு கிராமத்தில் கிணற்றில் புள்ளிமான் தண்ணீரில் தத்தளித்தது. தகவலறிந்த சிப்காட் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து  கிணற்றில் இறங்கி புள்ளி மானை  மீட்டு மேலே கொண்டுவந்தனர். பின்னர் புள்ளி மானை மாதர்பாக்கம் வனச்சரகரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: