மயங்கி விழுந்து மூதாட்டி சாவு

திருச்சி, மே 10: திருச்சி கருமண்டபத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே 65 வயதான மூதாட்டி மயங்கி கிடந்தார். தகவலறிந்த அமர்வு நீதிமன்ற போலீசார் மூதாட்டியை மீட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவர் தனது பெயர் முத்தம்மா என்று மட்டும் கூறினார். அதன்பிறகு எந்த தகவலும் சொல்லவில்லையாம். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மூதாட்டி இறந்தார். இதுகுறித்து எஸ்ஐ மோகன் வழக்குப்பதிந்து இறந்த மூதாட்டி யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக இங்கு வந்தார் என்று விசாரித்து வருகிறார்.

Related Stories: