கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமாகாவினர் 200 பேர் காங்கிரசில் இணைந்தனர்

அரவக்குறிச்சி, மே 10: அரவக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் 200 பேர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, க.பரமத்தி, வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூர் உள்ளிட்ட 6 வட்டாரங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தமாகாவினர் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி அரவக்குறிச்சியில் நடைபெற்றது. கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். அரவக்குறிச்சி வட்டார காங்கிரஸ் தலைவர் காந்தி வரவேற்றார். கரூர் எம்பி ஜோதிமணி, முன்னாள் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில பொறுப்பாளர் டாக்டர் கிரிவல்லபிரசாத் முன்னிலையில் அரவக்குறிச்சி தமாகா நிர்வாகி தமிழ்மணி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் தமாகாவிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தனர். அனைவரையும் தமிழக காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் கிரிவல்லபிரசாத் துண்டு அணிவித்து கட்சியில் இணைத்தார்.

Related Stories: