கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூரில் உள்ள வங்கியில் 30க்கும் மேற்பட்டவர்கள் தங்களது பத்திரங்களை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு வழங்கிய கடனில் அவர்கள் வாங்கிய கடன் தொகைக்கு பதிலாக அதிகப்படியான தொகை வைக்கப்பட்டு இருந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வங்கியில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பட்டரைபெரும்புதூரை சேர்ந்த ராமச்சந்திரன் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து தன் உடலில் ஊற்றி திடீரென தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையிலான போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த மண்ணெண்ணையை பாட்டிலை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். உடனடியாக அவரை ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Related Stories: