தொழிற்சாலையில் பணியின்போது தொழிலாளி பலி: இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் போராட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பாத்தபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(29). இவர் அங்குள்ள சிமென்ட் கல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றினார். இந்நிலையில், நேற்று முன்தினம் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட சக தொழிலாளர்கள் அவரை மீட்டு கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதனிடையே, பாத்தபாளையம் கிராம மக்கள் தொழிலாளி ரவி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறுத்தி சிப்காட் காவல்நிலையம் முன்பு திடீரென போராட்டம் நடத்தினர். போலீசார் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: