கோடைகால நீச்சல் சிறப்பு பயிற்சி முகாம் துவக்கம்

நாமக்கல், ஏப்.28: நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கோடை கால நீச்சல் சிறப்பு பயிற்சி முகாம் துவங்கியது. நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட அரசு நீச்சல் குளத்தில் கோடை கால சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் 6 கட்டமாக நடைபெறுகிறது. முதற்கட்ட பயிற்சி ஏப்ரல் 12ம் தேதி தொடங்கி முடிவைடந்துள்ளது. 2ம் கட்ட பயிற்சி ஏப்ரம் 26ல் தேதி தொடங்கி மே 11 வரை நடைபெறுகிறது. 3ம் கட்ட பயிற்சி மே 12ம் தேதி தொடங்கி 25 வரையும், 4ம் கட்ட பயிற்சி மே 26ம் தேதி தொடங்கி ஜூன் 8ம் தேதி வரையும், 5ம் கட்ட பயிற்சி ஜூன் 9ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரையிலும், 6ம் கட்ட பயிற்சி ஜூன் 23ம் தேதி தொடங்கி ஜூலை 6 வரையும் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு பயிற்சியானது பொதுப்பிரிவில் சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு காலை 7 மணி முதல் 8 வரையிலும், காலை 8 மணிக்கு தொடங்கி 9 மணி வரையிலும், மாலை 4 மணிக்கு தொடங்கி 5 மணி வரையிலும், 5 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரையிலும் நடைபெறுகிறது

Related Stories: