எருமப்பட்டி அருகே துணை மின்நிலைய கட்டுமான பணி

நாமக்கல், ஏப்.28: எருமப்பட்டி அருகேயுள்ள புதுக்கோட்டை ஊராட்சி கெட்டிமேட்டில் மின்வாரியம் சார்பில், புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதன் கட்டுமான பணிகளை, திமுக மாவட்ட பொறுப்பார் ராஜேஷ்குமார் எம்பி ஆய்வு செய்தார். அப்போது, துணை மின் நிலையத்திற்கு சாலை வசதி ஏற்படுத்த, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம், பிடிஓக்கள் குணாளன், பிரபாகரன், பொறியாளர் சாந்தி, எருமப்பட்டி ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியார் உடனிருந்தனர்.

Related Stories: