கோரிக்கைகளை வலியுறுத்தி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஏப்.28:  கிருஷ்ணகிரி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகம் முன், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சங்கர் விளக்கவுரை ஆற்றினார். தர்மபுரி மாவட்ட செயலாளர் நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார். செந்தில்குமார் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சண்முகம் பேசுகையில், ‘நிர்வாக சீர்கேட்டின் விளைவாக குடிநீர் வடிகால் வாரியம், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனை சரிசெய்ய ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை குறைக்கும் தவறான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை சரிபாதியாக குறைப்பது அநீதி. இது கண்டிக்கத்தக்கது. ஊழியர்கள் நியமிப்பதில் ஊழல் நடைபெறுவதால், குடிநீர் திட்டங்கள் முறையான பராமரிப்பின்றி பழுதுகள், உடைப்புகள் என தேவையற்ற செலவுகள் மூலம் வாரியப்பணம் வீணாகிக் கொண்டிருப்பதை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். எனவே, வாரியத்தை கண்டித்தும், பின்பாக்கி ஊதியம் உடனே வழங்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது,’ என்றார்.

Related Stories: