அரூர் மண்டிக்கு புளியங்கொட்டை வரத்து அதிகரிப்பு

அரூர், ஏப்.28:தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளி விளைச்சல் அதிகமாக உள்ளது. மாநிலத்தின் 50 சதவீத புளி தேவையை இந்த இரு மாவட்டங்களே பூர்த்தி செய்கிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் புளி அறுவடை சீசன் டங்குகிறது.புளிய மரத்தின் இலை, பழம், பட்டை, அனைத்துமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது. புளியங்கொட்டையில் 63 சதவீத மாவு பொருட்கள் உள்ளதால், புளியங்கொட்டையிலிருந்து பொடி எடுக்கப்பட்டு, துணி மெருகூட்டவும், சணல் நூல், செயற்கை நூல் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் எண்ணெய் வார்னீஷ், பெயிண்ட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மாட்டு தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது.முன்பு எதற்கும் பயன்படுத்தாமல் உரமாக்க குப்பைகளில் கொட்டப்பட்டு வந்த புளியங்கொட்டையிலிருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கப்படுவதால், இதன் விலை அதிகரித்துள்ளது. தற்போது கிலோ ரூ15 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: