பழைய இரும்பு கடையில் திருட்டு

தர்மபுரி, ஏப்.28:தர்மபுரி அடுத்த அதகப்பாடியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (31). இவர், தர்மபுரி-பென்னாகரம் சாலை சத்யா நகரில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு, வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றவர், நேற்று முன்தினம் காலை வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ₹2 ஆயிரம் மதிப்புள்ள காயில்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: