சரக்கு வேன் மோதி தொழிலாளி சாவு

அரூர், ஏப்.28: அரூர் அடுத்த பண்ணைமடுவு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(38), கல் உடைக்கும் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை, தனது வீட்டில் இருந்து அரூர் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கோனம்பட்டி அருகே வந்தபோது, எதிரே வந்த சரக்கு வேன் அவர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: