×

செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் பொறுப்புக்குழு உறுப்பினர் பேச்சு

காரைக்குடி, ஏப்.28: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வங்கி மேலாண்மையியல் துறையின் சார்பில் இந்திய நிதிச் சேவைத் துறையில் செயற்கை நுண்ணறிவு உள்பட பல்வேறு தொழில் நுட்பகங்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கம் நடந்தது. துறைத்தலைவர் பேராசிரியர் அலமேலு வரவேற்றார்.துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் கருப்புச்சாமி தலைமை வகித்து பேசுகையில், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மூலம் வரும் 2023ம் ஆண்டுக்குள் 447 பில்லியன் டாலர் மதிப்பிலான செலவினங்களை சேமிக்க வங்கிகளுக்கு உதவும். ஐபிஎம் கணக்கெடுப்பின்படி 1ல் 3 பங்கு நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவின் சில வடிவங்களை பயன்படுத்துகின்றன. செயற்கை நுண்ணறிவு திறனை உபயோகிக்க தெரிந்தவர்கள் நாட்டில் மிக குறைவாக உள்ளனர். கோவிட் போன்ற பெருந்தொற்று காலத்தில் எளிமையான பண பரிமாற்றத்துக்கு இந்த தொழில்நுட்பம் பெரிதும் பயன்பட்டது.செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த படிப்புகளின் தேவை எதிர்காலத்தில் அதிகரிக்கும். இப்படிப்புகள் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்றார்.வணிக ஆய்வாளர் சுதர்சன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பாலச்சந்திரன், மேலாண்மை துறை முதன்மையர் ராஜாமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் யோகலட்சுமி நன்றி கூறினார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ