சிறப்பு கண் பரிசோதனை முகாம்

திருச்சி, ஏப். 28: சமயபுரம் கு. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியும் திருச்சி மாக்ஸிவிஷன் கண் மருத்துவமனையும் இணைந்து சிறப்பு கண்பரிசோதனை முகாம் நேற்று (27ம்தேதி) அன்று கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமினை கல்லூரியின் முதல்வர் முனைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். முகாமில் சுமார் 400 மாணவர்களும், ஏராளமான ஆசிரியர்களும் கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர். உதவிபேராசிரியர்கள் நாகராஜன், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பாலகுமார், தேசிய சேவைதிட்டம் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: