×

அனைவருக்கும் வேலை கோரி ராமநாதபுரத்தில் சைக்கிள் பயணம்

ராமநாதபுரம், ஏப்.28: அனைவருக்கும் வேலை வழங்க கோரி சென்னை, குமரி, கோவை, புதுச்சேரி ஆகிய முனைகளில் இருந்து திருச்சி வரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஏப்.21 முதல் மே 1 வரை சைக்கிள் பயணம் தொடங்கியது. இதன் இணை பயணமாக ராமநாதபுரத்தில் இருந்து திருச்சிக்கு வாலிபர் சங்க மாநிலக்குழு உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, துரை நாராயணன் ஆகியோர் தலைமை வகித்தனர். வாலிபர் சங்க மாநில முன்னாள் செயலாளர் தொடங்கி வைத்தார்.சேது சமுத்திரத் திட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும். வேலை கோரும் உரிமை அடிப்படை உரிமையாக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் சைக்கிள் பயணத்தில் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட தலைவர் மாரிமுத்து, சிவகங்கை மாவட்ட நிர்வாகி ஜேம்ஸ் ராஜா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணகி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Ramanathapuram ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...