திருப்பூர் மாநகராட்சியில் ஏப்.30ல் கொரோனா தடுப்பூசி முகாம்

திருப்பூர், ஏப்.28: திருப்பூர்  மாநகராட்சி பகுதிகளில் வரும் 30ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி  முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது.இம்முகாம் 138 இடங்களில் நடைபெற உள்ளது. தற்போது, கொரோனா பாதிப்பு சில  மாவட்டங்களில் அதிகரிக்க தொடங்கிய நிலையில், இதுவரை தடுப்பூசி  செலுத்தாதவர்கள் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் இந்த  முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.அனைவரும் தவறாமல்  கலந்துகொண்டு இந்த தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக்கொண்டு, சுத்தமான  மற்றும் சுகாதாரமான மாநகரகமாக திருப்பூரை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என  மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Related Stories: